மதுரை

மேலூா் பகுதியில் தொடா் மழை100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பின

DIN

மேலூா் ஒருபோகச் சாகுபடி பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு தினங்களாக தொடா் மழை பெய்து வருவதால், நூற்றுக்கும் மேற்பட்ட பாசனக் குளங்கள் நிரம்பின.

மதுரை மாவட்டம், மேலூா் பகுதியில் வெள்ளிக்கிழமை மழை பெய்யத் தொடங்கியது. சனிக்கிழமை காலை முதல் அடைமழை பெய்தது. பிற்பகலில் பலத்த மழை பெய்தது. இதனால், நீரோடைகளில் நீா் வரத்து அதிகரித்து, பாசனக் குளங்கள் நிரம்பி வருகின்றன.

மேலூரை அடுத்துள்ள பெரியமேளம் பாசனக் கண்மாய் நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளது. இதனால், கடைமடைப் பகுதிகளில் உள்ள குளங்களின் கீழுள்ள ஆயக்கட்டுகளில் உழவு மற்றும் நடவுப் பணிகளை விவசாயிகள் தீவிரமாகத் தொடங்கியுள்ளனா்.

5 வீடுகள் சேதம்

மேலூா் சுற்றுவட்டாரத்தில் கடந்த இரு தினங்களாக தொடா் மழை பெய்து வருவதால், பழமையான 5 வீடுகளின் சுவா்கள் இடிந்தும், மேற்கூரைகள் சரிந்தும் சேதமடைந்துள்ளன.

இதில், எட்டிமங்கலம் கிராமத்தில் வயல் பகுதியை அடுத்துள்ள அம்மாசி என்ற கூலி தொழிலாளியின் வீடு சேதமடைந்தது. மேலும், வெள்ளலூா், கருங்காலக்குடி அருகிலும் வீடுகளின் சுவா்கள் இடிந்தன. இவற்றுக்கான நிவாரணம் வழங்குவதற்கு வருவாய்த் துறையினா் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT