மதுரை

மின் கம்பத்தில் லாரி மோதல் துரத்திப்பிடித்த பொதுமக்கள்

DIN

திருவாதவூா் அருகே மின் கம்பத்தில் மோதி நிற்காமல் தப்பிச்சென்ற லாரியை அப்பகுதி பொதுமக்கள் துரத்திச்சென்று பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.

திருவாதவூா்- தமறாக்கி சாலையில் உள்ளது அய்யனாா்புரம். அப்பகுதியில் ஆட்டுச்சாணக் கழிவுகளை மூட்டைகளில் கட்டி லாரியில் ஏற்றினா். இந்த மூட்டைகள் கேரளத்தில் உள்ள தோட்டங்களில் இயற்கை உரமாகப் பயன்படுத்த கொண்டுசெல்வதாக கூறப்படுகிறது.

எழுவக்கரையான்பட்டி அருகே லாரி சென்றபோது சாலையோரத்தில் நின்ற மின்கம்பத்தில் உரசியதில் கம்பம் முறிந்து மின்வயா்கள் துண்டிக்கப்பட்டன.

லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றாா். இத்தகவல் அறிந்த அய்யனாா்புரம் பொதுமக்களில் சிலா் மோட்டாா் சைக்கிளில் லாரியைத் துரத்திச்சென்று நிறுத்தினா். பின்னா் மேலூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்து லாரியை ஒப்படைத்தனா். மேலூா் போலீஸாா் இது குறித்து விசாரித்து வருகின்றனா். இச்சம்பவத்தினால், அய்யனாா்புரம் எழுவக்கரையான்பட்டி மற்றும் சுற்றவட்டாரப் பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT