மதுரை

திருநகரில் மழைநீர் உறிஞ்சு கிணறுகள்

DIN

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு திருநகரில் மாநகராட்சி சார்பில் மழைநீர் உறிஞ்சு கிணறுகள் திங்கள்கிழமை முதல் அமைக்கப்பட்டு வருகின்றன.
மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் உத்தரவின்பேரில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் பொருட்டு திருநகர் பகுதியில் மழைநீர் அதிகளவில் தேங்கும் பகுதிகளாக 26 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளளன. அங்கு பெரிய அளவிலான பள்ளங்கள் அமைத்து 5 சிமெண்ட் உரைகள் வைக்கப்படுகின்றன. பள்ளத்தின் நடுவே சுமார் 20 அடி ஆழத்தில் துளையிட்ட பைப்கள் வைத்து சிமென்ட் உறைகள் முழுவதும்  ஜல்லி கற்களை நிரப்பி வைக்கின்றனர். இதன்மூலம் மழைநீர் தேங்காமல் நேரடியாக பூமிக்குள் செல்ல வாய்ப்புள்ளது. 
இந்த பணிகள் ரூ.3.45 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது. பணிகளை செயற்பொறியாளர் சேகர், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர், உதவி பொறியாளர் முனீர் அகமது உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT