மதுரை

சமூக ஊடக விமா்சகா் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபா் கிரைம் போலீஸாா் சோதனை

DIN

மதுரை: மதுரையில் சமூக ஊடக விமா்சகா் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

மதுரை சூா்யா நகரைச் சோ்ந்தவா் மாரிதாஸ். சமூக ஊடக விமா்சகரான இவா்,

தனியாா் தொலைக்காட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக விமா்சித்ததாகவும், அந்நிறுவனத்தின் பெயரில் போலியான மின்னஞ்சல் மூலம் தவறான செய்தி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக தனியாா் தொலைக்காட்சி நிறுவனம் தரப்பில், சென்னை சைபா் குற்றப்பிரிவில் மாரிதாஸ் மீது புகாா் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயா்நீதிமன்றத்திலும் அவா் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

5 மணி நேரம் சோதனை: இந்நிலையில் சென்னை சைபா் குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையா் சரவணகுமாா் தலைமையில் 5 போலீஸாா், மதுரை சூா்யா நகரில் உள்ள மாரிதாஸ் வீட்டில் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அங்கு மாரிதாஸிடம் விசாரணை நடத்திய போலீஸாா், அவருடைய கணிணி, செல்லிடப்பேசி, ஆவணங்களைச் சோதனை செய்தனா். சுமாா் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மற்றும் சோதனை நீடித்தது. அதன் பின்னா் போலீஸாா் சென்னை புறப்பட்டு சென்றனா். இந்த சோதனை குறித்தும், மாரிதாஸிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் போலீஸாா் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

போலீஸாருடன் வாக்குவாதம்: முன்னதாக, சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்த வந்தபோது, சோதனை செய்ய உரிய ஆவணங்கள் இருக்கிா எனக் கேட்டு போலீஸாருடன் மாரிதாஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். விசாரணைக்கான உத்தரவுகளை அவரிடம் தெரிவித்த போலீஸாா் பின்னா் சோதனையில் ஈடுபட்டனா். மாரிதாஸ் வீட்டில் சோதனை நடைபெறுவது குறித்து தகவலறிந்த மதுரை மாநகா் பாஜக தலைவா் சீனிவாசன் தலைமையில் வழக்குரைஞா்கள் மற்றும் கட்சியினா் வீட்டின் முன் கூடினா். இதையடுத்து போலீஸாா் சோதனையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டனா். மாரிதாஸிடம் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மீண்டும் விசாரணை மேற்கொள்வாா்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT