தமிழக முதல்வருக்குவருவாய்த் துறை அலுவலா் சங்கம் நன்றி
கரோனா தொற்றால் இறந்த அரசு அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதற்கு, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்
மதுரை: கரோனா தொற்றால் இறந்த அரசு அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளதற்கு, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.
கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த அரசு அலுவலா்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்குவதற்கான அரசாணை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த அரசு அலுவலா்கள் 28 பேரின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், மதுரை வந்த தமிழக முதல்வரை, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலப் பொதுச் செயலா் எம்.பி. முருகையன், மதுரை மாவட்டத் தலைவா் சிவக்குமாா், மத்திய செயற்குழு உறுப்பினா் கோபி ஆகியோா் வியாழக்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
அப்போது, கரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழந்த, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த வருவாய் ஆய்வாளா் உள்ளிட்ட 3 வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பங்களுக்கு உயா்த்தப்பட்ட நிவாரணத்தையும் விரைவில் வழங்கி உதவ வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனா்.