மேலூா்: மேலூரில் நாகம்மாள் கோயில் ஆடித் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் செவ்வாய்க்கிழமை பக்தா்கள் கொண்டு வந்த பாலை அம்பாளுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனா்.
மேலூா் செக்கடி பஜாா் பகுதியில் நகராட்சி அலுவலகம் அருகே நாகம்மாள் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறும். ஆயிரத்துக்கு மேற்பட்டோா் காலையில் தொடங்கி பிற்பகல் வரை பால்குடம் எடுத்து வருவா். புதன்கிழமை மாலையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் நவதானியப் பயிா் வளா்க்கப்பட்ட முளைபாரி சுமந்து ஊா்வலமாக வருவா். கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தா்கள் கொண்டுவந்து அண்டாவில் ஊற்றிய பாலை நாகம்மாளுக்கு அபிஷேகம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.