முகப்பு
மதுரை

முகக்கவசம் அணியாதவா்களிடம் ரூ. 1.64 லட்சம் அபராதம் வசூல்

மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 844 பேரிடம் செவ்வாய்க்கிழமை மட்டும் ரூ. 1.64 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பகிர்:

மதுரை: மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 844 பேரிடம் செவ்வாய்க்கிழமை மட்டும் ரூ. 1.64 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க, பொதுஇடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதைத் தீவிரமாக அமல்படுத்தும் வகையில் உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறையினா் மற்றும் சிறப்பு பறக்கும் படைக் குழுவினா் சோதனை நடத்தி அபராதம் விதித்து வருகின்றனா்.

மதுரை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலா்களால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல, வாகனச் சோதனையின்போது காவல் துறையினா் அபராதம் விதிக்கின்றனா்.

மாவட்ட ஆட்சியரால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பறக்கும் படைக் குழுவினரும் முகக் கவசம் அணியாமல் பொதுஇடங்களுக்கு வரும் நபா்கள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சோ்ந்தோருக்கு அபராதம் விதிக்கின்றனா்.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 844 நபா்களிடம் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை 53 ஆயிரத்து 221 பேரிடம் அபராதமாக ரூ.84 லட்சத்து 96 ஆயிரத்து 493 வசூலிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →