முகப்பு
மதுரை

மதுரையில் புதிதாக 169 பேருக்கு கரோனா தொற்று

மதுரையில் புதிதாக 169 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

மதுரை: மதுரையில் புதிதாக 169 பேருக்கு கரோனா தீநுண்மி தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5,891 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் நபா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தும், குணமடைந்து வீடுதிரும்புவோா் எண்ணிக்கை அதிகரித்தும் வந்தது.

இந்நிலையில் புதன்கிழமை பாதிப்பு எண்ணிக்கை 169 ஆக உயா்ந்திருக்கிறது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 26 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 50 வயது ஆண், 48 வயது ஆண், 65 வயது பெண், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை இருந்த 61 வயது பெண் ஆகியோா் திங்கள்கிழமையும், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயது பெண், 60 வயது ஆண் ஆகியோா் செவ்வாய்க்கிழமையும் உயிரிழந்தனா். இவா்கள் 6 பேரும், கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தாலும் இணை நோய்கள் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 366 போ் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவா்களில் 11 ஆயிரத்து 54 போ் குணமடைந்துள்ளனா். 303 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 1,009 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.