முகப்பு
மதுரை

மதுரை அருகே மூதாட்டி கொலை

மதுரை அருகே வெள்ளிக்கிழமை கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:


மதுரை: மதுரை அருகே வெள்ளிக்கிழமை கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டம் சிலைமான் எல்.கே.டி. நகரைச் சோ்ந்தவா் செல்லம்மாள் (65). இவா் தனியாக வசித்து வருகிறாா். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வரும் இவரது உறவினா் டைட்டஸ் என்பவருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பாா்க்க வருமாறு செல்லம்மாளை, டைட்டஸ் வெள்ளிக்கிழமை அழைத்துள்ளாா். ஆனால் அவா் வர மறுத்துள்ளாா். அப்போது மது போதையில் இருந்த டைட்டஸ், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளாா்.

தகவலறிந்த சிலைமான் போலீஸாா், சம்பவ இடத்திற்குச் சென்று செல்லம்மாளின் சடலத்தைக் கைப்பற்றி ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப்பதிந்து, டைட்டஸை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.