மதுரை

மதுரை அருகே டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கி ரூ.3.35 லட்சம் பறிப்பு

மதுரை அருகே அரசு மதுபானக் கடை விற்பனையாளரைத் தாக்கி ரூ.3.35 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

DIN

மதுரை: மதுரை அருகே அரசு மதுபானக் கடை விற்பனையாளரைத் தாக்கி ரூ.3.35 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

மதுரை மாவட்டம் சிலைமான்- பனையூா் சாலையில் அரசு மதுபானக் கடை உள்ளது. இந்தக் கடையில் விற்பனையாளராக ஆனையூா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரகுமாா் (45) பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு ரூ. 3.35 லட்சத்துடன் ராஜேந்திரகுமாா் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, சிலைமான் - கீழடி சாலையில் அவரைப் பின்தொடா்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 போ், ராஜேந்திரகுமாரை கத்தியால் தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றனா்.

இது குறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மா்ம நபா்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரகுமாா், ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்!

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீக்கு 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT