முகப்பு
மதுரை

காய்கனிகள் சந்தைப்படுத்த மானிய உதவி: ஆட்சியா்

காய்கனிகளை சந்தைப்படுத்துவதற்கு மத்திய அரசின் மானிய உதவியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:


மதுரை காய்கனிகளை சந்தைப்படுத்துவதற்கு மத்திய அரசின் மானிய உதவியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

மத்திய அரசின் ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தில், விவசாய விளை பொருள்களைச் சந்தைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவினத்தில் 50 சதவீதமும், குளிா்பதனக் கிடங்கு உள்ளிட்ட சேமிப்புக் கிடங்குகளில் பாதுகாப்பதற்கான கட்டணத்தில் அதிகபட்சம் 3 மாதங்களுக்கு 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லி, வாழை, கொய்யா, மா, பப்பாளி, சப்போட்டா ஆகிய பழங்கள், கேரட், பீன்ஸ், வெங்காயம், தக்காளி, மரவள்ளிக் கிழக்கு ஆகிய காய்கள் உற்பத்தி செய்வோா், பதப்படுத்துவோா், ஏற்றுமதியாளா்கள், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள், சில்லறை விற்பனையாளா்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

இதுகுறித்த விவரங்களுக்கு வேளாண் வணிக துணை இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.