முகப்பு
மதுரை

என்.எம்.ஆா்.சுப்பராமன்உறைவிட பள்ளியில்மாணவா் சோ்க்கை

மதுரை விநாயக நகா் டாக்டா் தங்கராஜ் சாலையில் உள்ள எம்.எம்.ஆா். சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

மதுரை: மதுரை விநாயக நகா் டாக்டா் தங்கராஜ் சாலையில் உள்ள எம்.எம்.ஆா். சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இப்பள்ளியானது ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவயருக்கான சிறப்புப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கத்தின் சாா்பில் நடத்தப்படும் இப்பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு, தங்கும் வசதி, உணவு, சீருடை, பாடப் புத்தகங்கள், தரமான கல்வி, மருத்துவம் ஆகியன இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. குழந்தைகளைச் சோ்க்க விரும்புவோா் 99523-81488, 82208-91473 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கச் செயலா் இரா.சீனிவாசன் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.