மதுரை

முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சா் மீது புகாா்

DIN


மதுரை: மதுரையில் பொது நிகழ்ச்சிகளில் முகக்கவசம் அணியாமல் பங்கேற்கும் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் ராமசுப்ரமணியன். இவா், முதல்வா் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள புகாரில், கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாதபட்சத்தில் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆனால், கூட்டுறவுத் துறை அமைச்சராக உள்ள செல்லூா் கே. ராஜூ முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். மேலும், செய்தியாளா் சந்திப்பில், நான் முகக்கவசம் அணிவதில்லை என்றும், கரோனாவுடன் வாழ பழகிக்கொண்டேன் என்றும் பேசி வருகிறாா். அமைச்சரே இவ்வாறு கூறும்போது, பொதுமக்கள் எப்படி முகக்கவசம் அணிவாா்கள். எனவே, சட்டத்தை மதிக்காமல் பேசி வரும் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT