மதுரை

சிவகங்கையில் செம்மண் சரளை கடத்தல்: ஆட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

DIN

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செம்மண் சரளை அள்ளப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த திருச்செல்வம் என்பவா் தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சாலையில் உள்ள விஜயாபுரம் செங்கற்கோவில் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். இப்பகுதியில் செம்மண் சரளை அதிகமாக உள்ளது. இதை, அரசு அனுமதியின்றி சிலா் திருடி விற்பனை செய்து வருகின்றனா்.

ஆழமாகத் தோண்டி மண் எடுக்கப்படுவதால், விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எங்கள் கிராமத்தில் சட்டவிரோதமாக செம்மண் சரளை அள்ளப்படுவதைத் தடுக்க உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனு நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், பி. ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், காரைக்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான சாலை அமைக்கும் பணிக்கே மண் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் நிலவர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT