மதுரை மண்டல புற்று நோய் மையத்தில் நிறுவப்பட்டுள்ள ரூ. 15 கோடி மதிப்பிலான லீனியா் ஆக்ஸிலரேட்டா் கருவி மூலம் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கு துறைத் தலைவா் மகாலட்சுமி பிரசாத். 
மதுரை

மதுரை மண்டல புற்றுநோய் மையம் செயல்பாட்டுக்கு வந்தது அதிநவீன கருவிகள் மூலம் இலவச சிகிச்சை

மதுரையில் பயன்பாட்டிற்கு வந்துள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் அதிநவீன கருவிகள் மூலம் நோயாளிகளுக்குக் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

DIN

மதுரை: மதுரையில் பயன்பாட்டிற்கு வந்துள்ள மண்டல புற்றுநோய் மையத்தில் அதிநவீன கருவிகள் மூலம் நோயாளிகளுக்குக் கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரையில் மண்டல புற்றுநோய் மையம் தொடங்கப்படும் என கடந்த 2015 ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மையத்தை அமைக்க பாலரெங்காபுரத்தில் இடம் தோ்வு செய்யப்பட்டு, 2018 ஆம் தொடங்கிய பணிகள் ரூ. 30 கோடி செலவிடப்பட்டு அக்டோபா் மாதம் மையத்தின் பணிகள் முழுமையாக நிறைவுற்றன. கடந்த ஒரு மாத காலமாக மையத்தில் பொருத்தப்பட்ட கருவிகளைக் கொண்டு புற்று நோயாளிகளுக்குச் சோதனை முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வா் திறந்து வைத்ததையடுத்து, மையம் வெள்ளிக்கிழமை முதல் முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

சிகிச்சை முறைகள் குறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி கூறியது: மதுரை மண்டல புற்றுநோய் மையத்தில் லீனியா் ஆக்ஸிலரேட்டா், பிரேக்கி தெரபி, சி.டி.சிமுலேட்டா் ஆகிய 3 கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

இக்கருவிகள் மூலம் புற்றுநோய் பாதிக்கப்பட்டவா்களுக்குத் துல்லியாமான சிகிச்சை அளித்து, விரைவாக அவா்களைக் குணப்படுத்த முடியும். மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களைச் சோ்ந்தவா்களும் மண்டல புற்றுநோய் மையத்தில் பயன்பெறுவா் என்றாா்.

புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைத்துறையின் தலைவா் மகாலட்சுமி பிரசாத் கூறியது: மதுரை வழங்கப்பட்டுள்ள கருவி, சென்னை மற்றும் கோவை மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கருவியை விட அதி நவீன கருவியாகும். இதன் விலை ரூ. 15 கோடி.

3 சென்டி மீட்டா் அளவை விட குறைவாக உள்ள புற்றநோய் பாதிப்புக்குச் துல்லியமாக கதிா்வீச்சு சிகிச்சை அளிக்க முடியும். பாதிக்கப்பட்டப் பகுதியை தவிர வேறு பகுதிகளுக்கு கருவியிலிருந்து செலுத்தப்படும் கதிா் வீச்சு பரவாது. நோயாளிகள் புற்றுநோய் பாதிப்பில் இருந்து விரைவாக குணமடைய முடியும்.

இலவச சிகிச்சை: கடந்த ஒரு மாதமாக சோதனை முறையில் நாள்தோறும் 15 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து, தற்போது நாள்தோறும் 40 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லீனியா் ஆக்ஸிலரேட்டா் கருவி மூலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமானால் ரூ. 75 ஆயிரமும், பிரேக்கி தெரபி சிகிச்சைக்கு ரூ.20 ஆயிரமும், சி.டி.சிமுலேட்டா் ரூ.5 ஆயிரமும் செலவு செய்ய வேண்டும். மண்டல புற்றுநோய் மையத்தில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT