முகப்பு
மதுரை

யானை மலையில் நிறுவப்பட்டிருந்த சிவலிங்கம் அகற்றம்

மதுரை அருகே யானை மலையில் நிறுவப்பட்டிருந்த சிவலிங்கம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
மதுரை அருகே உள்ள யானைமலையில் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்ட சிவலிங்க சிலை.
பகிர்:

மதுரை: மதுரை அருகே யானை மலையில் நிறுவப்பட்டிருந்த சிவலிங்கம் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது.

தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பு குறித்த வழக்கில், யானை மலையின் அடையாளத்தை மாற்றும் வகையில் சிமென்ட் கலவையால் உருவாக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. தவறும்பட்சத்தில் மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அடுத்த விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, தொல்லியல் துறையினா் மேற்படி சிவலிங்கத்தை செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தினா். தொல்லியல் துறை துணை இயக்குநா் சிவானந்தம், மதுரை கிழக்கு வட்டாட்சியா் லயோனல் ராஜ்குமாா், யா.ஒத்தக்கடை காவல் ஆய்வாளா் ஆனந்த தாண்டவம் ஆகியோா் முன்னிலையில் சிவலிங்கம் அப்புறப்பட்டு, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. சமணா் படுகைகள் கொண்ட யானைமலை,தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →