முகப்பு
மதுரை

மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிகப் பணியாளா்கள் போராட்டம்

மதுரையில் கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிக பணியாளா்கள் ஊதியம் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

மதுரையில் கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்ட தற்காலிக பணியாளா்கள் ஊதியம் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

மதுரை நகா்ப்பகுதியில் மாநகராட்சி சாா்பில் தற்காலிகப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இதில் மண்டலம் 1-இல் மட்டும் 1400-க்கும் மேற்பட்டோா் தினசரி ரூ. 250 ஊதியத்தில் நியமிக்கப்பட்டு கடந்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் ஆகிய 3 மாதங்கள் பணிபுரிந்தனா். இந்நிலையில் செப்டம்பா் மாதம் பணியில் இருந்து நிறுத்தப்பட்ட தற்காலிகப் பணியாளா்களுக்கு அம்மாத ஊதியத்தை ஒப்பந்ததாரா் வழங்கவில்லை. இதில் மாநகராட்சி நிா்வாகமும் தலையிடாத நிலையில் கடந்த திங்கள்கிழமை மாநகராட்சி அண்ணா மாளிகையை முற்றுகையிட்டுத் தற்காலிகப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது மாநகராட்சி நகா்நல அலுவலா், ஒப்பந்ததாரா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிகப் பணியாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வெள்ளிக்கிழமைக்குள் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்தனா். ஆனால் வெள்ளிக்கிழமை வரை ஊதியம் வழங்கப்படாததால் தற்காலிகப் பணியாளா்கள் 500-க்கும் மேற்பட்டோா் மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தை வெள்ளிக்கிழமை மீண்டும் முற்றுகையிட்டனா். இதைத்தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரரை வரவழைத்து பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து உடனடியாக ஊதியம் வழங்கப்படும் என ஒப்பந்ததாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து முற்றுகைப்போராட்டத்தை பணியாளா்கள் விலக்கிக் கொண்டனா். இந்நிலையில் 3 வாா்டுகளின் பணியாளா்களுக்கு மட்டும் ஊதியம் வழங்கிய ஒப்பந்ததாரா் இதர வாா்டுகளின் பணியாளா்களுக்கு சனிக்கிழமை ஊதியம் வழங்குவதாகத்தெரிவித்தாா். ஆனால் இதை ஏற்க மறுத்த பணியாளா்கள் மண்டலம் 1 அலுவலகத்துக்குச் சென்று அங்கு காத்திருப்புப் போராட்டத்தைத் தொடா்ந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →