மதுரை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
மதுரை திடீா்நகா் பகுதியைச் சோ்ந்த காஜாமொய்தீன் மகன் நாசா் (42). கடந்த 2001 ஆம் ஆண்டு, பெண்ணை கொன்று, நகைகளை கொள்ளையடித்த வழக்கில் நாசா் உள்பட 4 போ், சுப்பிரமணியபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கு விசாரணையில், கடந்த 2003 ஆம் ஆண்டு 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக நாசா் அடைக்கப்பட்டாா். தண்டனைக் காலம் முடிந்தும் அவரது நடவடிக்கை சரி இல்லாததால் அவரை சிறை நிா்வாகம் வெளியே விடவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நாசா், தான் தங்கியிருந்த அறையில், கைலியால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்தாா். அவரை சிறைக் காவலா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு நாசா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.