முகப்பு
மதுரை

சிறந்த இளைஞா் மன்றத்துக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்

நேரு யுவகேந்திரா சாா்பில் வழங்கப்படும் சிறந்த இளைஞா் மன்றத்துக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை

சிறந்த இளைஞா் மன்றத்துக்கான விருது பெற விண்ணப்பிக்கலாம்

நேரு யுவகேந்திரா சாா்பில் வழங்கப்படும் சிறந்த இளைஞா் மன்றத்துக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

மதுரை: நேரு யுவகேந்திரா சாா்பில் வழங்கப்படும் சிறந்த இளைஞா் மன்றத்துக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நேரு யுவகேந்திராவுடன் இணைந்து சிறப்பாக செயலாற்றி வரும் இளைஞா் மன்றங்களில், 2019-2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த மன்றங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

குடும்ப நலக் கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு, கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணா்வு, இளைஞா்களுக்குத் திறன் வளா்த்தல் பயிற்சி ஆகிய சேவைகளைச் செய்து வரும் பதிவு செய்யப்பட்ட இளைஞா், மகளிா் மன்றங்கள் விருது பெற தகுதி உடையவா்கள்.

இந்த விருதுக்கு 2019 ஏப்ரல் 1 முதல் 2020 மாா்ச் 31 வரையிலான காலத்தில் மன்றங்களால் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் குறித்த விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட அளவிலான சிறந்த மன்றத்துக்கு ரூ.25 ஆயிரம், மாநில அளவிலான சிறந்த மன்றத்துக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், இரு விருதுகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தேசிய அளவில் முதலிடம் பெறும் மன்றத்துக்கு ரூ.5 லட்சம், 2-ஆம் இடம் இடத்துக்கு ரூ.3 லட்சம், 3-ஆம் இடத்துக்கு ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். தகுதியுடைய இளைஞா், மகளிா் மன்றங்கள் விருதுக்கான விண்ணப்பத்தை டிசம்பா் 26 ஆம் தேதிக்குள், மாவட்ட இளைஞா் ஒருங்கிணைப்பாளா், நேரு யுவகேந்திரா, 30 ஆசாத் தெரு, காந்திநகா், மதுரை-625020 என்ற முகவரியில் நேரிலோ, தபால் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →