முகப்பு
மதுரை

பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தாவிட்டால் தொடா் போராட்டம்: பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவிப்பு

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய முறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடா் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய முறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடா் போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் அறிவித்துள்ளது.

இச்சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் இணைய வழியில் நடைபெற்றது. கூட்டத்தில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி தமிழகத்தில் அனைத்து ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட

ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும். தற்போது பணியில் உள்ள பட்டதாரிஆசிரியா்கள் மற்றும் தமிழாசிரியா்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வு வழங்க வேண்டும். உயா்கல்விக்கான ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை 2021 ஜனவரி 31-க்குள் தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழகம் முழுவதும் மறியல் உள்ளிட்ட தொடா் போராட்டங்களை நடத்துவது உள்ளிட்டத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுதில்லியில் 20 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் நிறுவனத்தலைவா் அ.மாயவன், மாநிலத்தலைவா் எஸ்.பக்தவச்சலம், பொதுச்செயலா் எஸ்.சேதுசெல்வம் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →