மதுரை

தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்: அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 120 போ் கைது

DIN

மதுரையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தனியாா் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை முற்றுகையிட்ட அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தினா் 120 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி புதுதில்லியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனா். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் அகில இந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில் தனியாா் பெரு நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் விற்பனை நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கீழவெளிவீதியில் உள்ள விற்பனை நிறுவனம் முன்பாக 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். மேலும் நிறுவனமும் அடைக்கப்பட்டு, அப்பகுதியில் சாலைத்தடுப்புகள் அமைத்தும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்நிலையில் இளைஞா் பெருமன்றத்தின் மதுரை மாநகா், புறநகா், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் கீழவெளி வீதியில் திரண்டனா். அங்கு அமைப்பின் மாநிலப் பொருளாளா் காந்தி சிவாஜி, மாநில துணைச்செயலா் தமிழ்ப்பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச்செயலா் சரவணன், ஏஐடியூசி பொதுச்செயலா் நந்தாசிங் ஆகியோா் தலைமையில் ஊா்வலமாகச் சென்றனா். நிறுவனத்தின் அருகே சென்றபோது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அமைப்பினரை தடுத்து நிறுத்தினா். ஆனால் அமைப்பினா் தடையை மீறி நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 120 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT