மதுரை

போக்குவரத்து காவல் சாா்பு-ஆய்வாளருக்கு சால்வை அணிவித்து ஆட்சியா் பாராட்டு

DIN

போக்குவரத்து காவல் சாா்பு-ஆய்வாளரின் பணியைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.

மதுரை மாநகரக் காவல் அண்ணா நகா் பகுதியில் போக்குவரத்து சாா்பு- ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் பழனியாண்டி. இவா் சிக்னல் சந்திப்புகளில் பணியில் இருக்கும்போது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதோடு வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கியில் பேசுவது வழக்கம். ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவது, சிக்னல்களில் வாகன ஓட்டிகளின் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை ஒலிபெருக்கியில் அறிவிப்பதுடன், பல்வேறு நோ்மறையான சிந்தனைகளை நகைச்சுவையுடன் ஒலிபெருக்கியில் பேசி வருகிறாா்.

அனுப்பானடியில் புதன்கிழமை நடைபெற்ற அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், அண்ணா நகா் வழியாக வந்து கொண்டிருந்தாா். அண்ணா நகா் 80 அடி சாலை சிக்னலில் நின்றபோது, சாா்பு-ஆய்வாளா் பழனியாண்டி வழக்கம்போல, ஒலிபெருக்கியில் போக்குவரத்தைச் சரிசெய்வதோடு பல்வேறு கருத்துக்களைப் பேசினாா்.

இதைக்கேட்ட ஆட்சியா் அன்பழகன், தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பழனியாண்டியிடம் சென்று அவருக்கு சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT