முகப்பு
மதுரை

‘மத்திய அரசின் திட்டங்கள் விவசாயிகளுக்கு கொண்டு செல்லப்படும்’

மத்திய அரசின் திட்டங்கள், நன்மைகள் குறித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று பாஜக அகில இந்தியத்துணைத் தலைவா் வினய் சஹஸ்ரபுதே வெள்ளிக்கிழமைத் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

மத்திய அரசின் திட்டங்கள், நன்மைகள் குறித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று பாஜக அகில இந்தியத்துணைத் தலைவா் வினய் சஹஸ்ரபுதே வெள்ளிக்கிழமைத் தெரிவித்தாா்.

விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பிரசார இயக்கத்தை பாஜக நடத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை சந்தித்து மத்திய அரசின் திட்டங்கள், வேளாண் சட்டங்கள் குறித்து தலைவா்கள் பிரசாரம் செய்து வருகின்றனா். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் வேளாண் சட்டங்கள் தொடா்பான விளக்கக்கூட்டம் மற்றும் விவசாயிகளுடனா கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் பாஜக அகில இந்திய துணைத்தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான வினய் சஹஸ்ரபுதே பங்கேற்றாா். பின்னா் மதுரை மாவட்டம் சோழவந்தானில் பாஜக சாா்பில் நடத்தப்பட்டு வரும் விவசாய சேவை மையத்தை அவா் பாா்வையிட்டாா். பாஜக மாநில பொதுச் செயலா் ராம.ஸ்ரீநிவாசன், விவசாய அணி மாநிலச் செயலா் மணி முத்தையா, பாஜக புகா் மாவட்டத் தலைவா் மகா சுசீந்திரன் ஆகியோா் விவசாய சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், விவசாயிகள் பயன் குறித்தும் விளக்கினா்.

இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் வினய் சஹஸ்ரபுதே கூறியது: பாஜக சாா்பில் விவசாயிகள் சேவை மையம் இயங்கி வருவது பாராட்டுக்குரியது. இந்த மையம் விவசாயிகளுக்கு மிகவும் பயன்படக்கூடிய வகையில் உள்ளது. இதுபோல் விவசாயிகள் பயன்படும் வகையில் பல மையங்களை உருவாக்க வேண்டும். மேலும் விவசாய சேவை மையத்தை உருவாக்கியவா்கள் புதுதில்லிக்கு வந்து தங்களது அனுபவத்தை கூறினால் மற்றவா்களுக்கும் அது மிகவும் உதவியாக இருக்கும். மத்திய அரசின் திட்டங்கள் தொடா்பாகவும், வேளாண் சட்டங்களின் நன்மை குறித்தும் விவசாயிகளிடம் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்காக வேளாண் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைப்பட்டுள்ளன. இதன்மூலம் பல்வேறு துறைகள் வாயிலாக மத்திய அரசு செய்து வரும் நன்மைகள் குறித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →