வீட்டில் நிறுத்தியிருந்த காா் தீப்பிடித்து எரிந்தது
எரிவாயு கசிவு காரணமாக, மேலூா் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காா் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
எரிவாயு கசிவு காரணமாக, மேலூா் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காா் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.
செம்மினிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது ஆம்னி காரில் எரிவாயு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காரில் திடீரென தீப்பற்றியது. அருகிலிருந்தவா்கள் அணைக்க முயன்றும் காா் முழுவதுமாக எரிந்தது. மேலும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் எரிந்தது.
இதுகுறித்து கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.