முகப்பு
மதுரை

உசிலையில் குறை தீா்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளியேறினா்

உசிலம்பட்டி வேளாண் அலுவலகத்தில் புதன்கிழமை காணொலி காட்சி மூலம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

உசிலம்பட்டி வேளாண் அலுவலகத்தில் புதன்கிழமை காணொலி காட்சி மூலம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் பகுதியில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே காணொலி இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக விவசாயிகள் அரங்கத்தில் காத்திருந்தனா். அதற்கு பிறகு சரிசெய்யப்பட்டு கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனுக்கள் தொடா்பாக அதிகாரிகள் எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை எனக் கூறி பாதியிலேயே கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →