மதுரை

பைக் மீது லாரி மோதிஇளைஞா் பலி

DIN

மதுரை அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே உள்ள மிளகரணை பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ் (18). இவா் ஐ.டி.ஐ. படித்து முடித்து விட்டு மோல்டிங் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை நாகராஜ் இரு சக்கர வாகனத்தில் சிக்கந்தா் சாவடி அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த லாரி நாகராஜின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து நாகராஜின் தந்தை ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் அலங்காநல்லூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

110 வாக்குகளில் தோல்வியா? காங்கிரஸ் எதிர்ப்பால் மறுஎண்ணிக்கை!

நீலகிரி, தர்மபுரி, தஞ்சாவூர் தொகுதிகளில் திமுக வெற்றி!

உ.பி.: வேட்பாளர்களின் இறுதி நிலவரம் என்ன?

இந்தியா கூட்டணியுடன் உறவா? தெலுங்கு தேசம் விளக்கம்

SCROLL FOR NEXT