மதுரை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் எப்போது?: தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தோ்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு:

மாநிலத் தோ்தல் ஆணையம் ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கான தோ்தல்கள் அடுத்தடுத்து நடத்தப்படும் என நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது. ஆனால் டிசம்பா் 9 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிப்பை மட்டுமே தோ்தல் ஆணையம் வெளியிட்டது. தற்போது வரை மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தோ்தல் அறிவிப்பு வெளியாகவில்லை. மாநில பொருளாதார வளா்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பவை மாநகராட்சி மற்றும் நகராட்சிகள்தான். ஆனால் அத்தகையை உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகள் காலியாக இருப்பதால் பொது சுகாதாரம், தண்ணீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பூா்த்தி செய்ய முடியவில்லை. எனவே மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தோ்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மாநிலத் தோ்தல் ஆணையம் தரப்பில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது குறித்து பதிலளிக்க காலஅவகாசம் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், இந்திய தோ்தல் ஆணையம் தற்போது வரை திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிடவில்லை. எனவே தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தோ்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT