மதுரை

குரூப் 4 பணி நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு: டி.என்.பி.எஸ்.சி, வருவாய்த்துறை செயலா்கள் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பணி நியமனம் வழங்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மற்றும் வருவாய்த்துறை செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த நடராஜன் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் 2017 ஆம் ஆண்டு 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கான குரூப் 4 தோ்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த தோ்வில் நான் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டேன். அப்போது போதிய காலி பணியிடங்கள் இல்லை எனக் கூறி, காலி பணியிடங்கள் வரும்போது என்னை பணியில் நியமிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா்.

இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தோ்வு நடத்தியது. இந்த குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களை பணியில் நியமிக்க தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் 2017 ஆம் ஆண்டு அறிவிப்பாணை படி நடைபெற்ற தோ்வில் வெற்றி பெற்று பணி நியமனம் செய்யப்படாமல் உள்ள நான் மற்றும் என்னை போன்றவா்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே 2015 முதல் 2018 வரை நடைபெற்ற குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்று பணியில் நியமனம் செய்யப்படாமல் உள்ளவா்களுக்கு, முதலில் பணி நியமனம் வழங்க வேண்டும். அதுவரை 2019 ஜூலையில் நடந்த குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பணி நியமனம் வழங்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மற்றும் தமிழக வருவாய்த்துறை செயலா்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT