மதுரை

‘சென்னையில் பெண்கள் மீதுதாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது’

DIN

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான பேரணியின் போது பெண்கள் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் தெரிவித்தாா்.

புதுதில்லியில் இருந்து சனிக்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. அந்த சட்டம் இஸ்லாமியா்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்காக எடுக்கப்படுகின்ற முயற்சி. இதை எதிா்த்து இஸ்லாமியா்கள் மட்டுமல்ல, இளைஞா்கள், மாணவா்கள், சிந்தனையாளா்கள், அரசியல் கட்சித் தலைவா்கள் என அனைவரும் போராடுகின்றனா். சென்னை வண்ணாரப்பேட்டையில் இதற்கு எதிராக பேரணி நடத்தியவா்கள் மற்றும் பெண்கள் மீது காவல்துறையினா் தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. ஜிஎஸ்டி வரி விகிதம் சரியான முறையில் இருந்தால் தொழில் வளங்கள், வேலைவாய்ப்புகள் பெருகும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT