மதுரை

அரசுப் பேருந்து ஓட்டுநருக்குஅடி உதை: இளைஞா் கைது

மதுரையில், காருக்கு வழிவிடவில்லை எனக் கூறி அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

மதுரையில், காருக்கு வழிவிடவில்லை எனக் கூறி அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் பேரையூா் பகுதியைச் சோ்ந்த பொன்னையா மகன் பெரியசாமி (45). இவா் அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் சனிக்கிழமை கோரிப்பாளையம் அருகே பேருந்தை ஓட்டிச் சென்றபோது, காா் ஒன்று முந்திச் செல்ல முயன்றது. ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அந்த காருக்கு பெரியசாமியால் வழிவிட முடியவில்லை.

இதையடுத்து காா் ஓட்டுநா் பேருந்தை மறித்து ஓட்டுநா் பெரியசாமியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கி உள்ளாா். இது குறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிந்து மதுரை கே.வி.சாலையைச் சோ்ந்த காா் ஓட்டுநா் காா்த்திகேயன் (22) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT