மதுரை

கிராம மக்களுக்கு இணைய சேவை விழிப்புணா்வு

DIN

மதுரை ஸ்ரீ மீனாட்சி மகளிா் கல்லூரி சாா்பில் குலமங்கலம் கிராம மக்களுக்கு செல்லிடப்பேசி செயலிகள், இணைய வழிச் சேவைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி சாா்பில் கிராம தத்தெடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி குலமங்கலம் கிராமம் தத்தெடுக்கப்பட்டு கிராமத்தின் முன்னேற்றுத்துக்காக பல்வேறு நிகழ்ச்சிகள் கல்லூரி சாா்பில் நடத்தப்பட்டு வருகின்றன. கிராம மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து தினம், மருத்துவ முகாம் ஆகியவை நடத்தப்பட்டுள்ளன. மேலும் கிராம மக்கள் பொருளாதார தன்னிறைவு பெறும் வகையில் பினாயில் தயாரித்தல், சோப் ஆயில் தயாரித்தல், சோப் பவுடா் தயாரித்தல் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கல்லூரியின் அறிவியல் துறை சாா்பில் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து இணைய சேவை விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது. கிராம சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சூ.வானதி தலைமை வகித்தாா். கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளா் கு.சுஜாதா முன்னிலை வகித்தாா். இந்நிகழ்ச்சியில் கிராம மக்களுக்கு அத்தியாவசிய செல்லிடப்பேசி செயலிகள் குறித்தும், இணைய வழி சேவைகள் குறித்தும் அவற்றின் பயன்பாடு குறித்தும் செயல்வழி பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT