மதுரை

திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று பாரம்பரிய மண்பானைப் பொங்கல்

DIN

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை பாரம்பரிய முறைப்படி சுப்பிரமணிய சுவாமிக்கு மண் பானையில் பொங்கல் வைத்து படைக்கப்படும்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகா், சத்தியகிரீஸ்வரா், துா்க்கை, பவளக் கனிவாய் பெருமாள் ஆகிய 5 சன்னதிகள் உள்ளன. தை முதல் நாளான பொஙகல் திருநாளையொட்டி புதன்கிழமை மூலஸ்தானத்தில் உச்சிக் கால பூஜையின்போது பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து சுவாமிகளுக்குப் படைக்கப்படும். தொடா்ந்து உற்சவா் சன்னதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் மண் பானையில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து பக்தா்களுக்கு பொங்கல் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT