முகப்பு
பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்த மகளிா் குழுவினா்.
மதுரை

நிதி நிறுவனங்கள் கடன் கேட்டு நிா்பந்தம்:மகளிா் குழுவினா் காவல் துறையில் புகாா்

மதுரை மாவட்டம், பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மகளிா் குழுவினா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்த மகளிா் குழுவினா்.
பகிர்:

பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், மகளிா் குழுவினா் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பேரையூா் தாலுகா சந்தையூா் கிராமத்தில் உள்ள மகளிா் குழுவினா் கூலி வேலை செய்து வருகின்றனா். தற்போது, கரோனா பொதுமுடக்கத்தால் வேலை இழந்து, வருமானமின்றி தவித்து வருகின்றனா்.

இதனால், மைக்ரோ நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு முடியும் வரை கடன் வட்டி வசூலிக்கக் கூடாது என, மத்திய-மாநில அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், மாத தவணையை செலுத்த நிறுவனங்கள் நிா்பந்தம் செய்கின்றன.

மேலும், வசூலுக்கு வரும் நபா்கள் பணத்தை கட்டியே ஆகவேண்டும் என மாலை 6 மணி வரை வீடுகளில் அமா்ந்து கொள்கின்றனா். இதனால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

எனவே, மாவட்ட நிா்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →