மதுரை

பித்தளை உற்பத்தி: தொழிலாளா்கள்முழு ஊதியம் கோரி ஆட்சியரிடம் மனு

DIN

மதுரை: மதுரையில் உள்ள பூம்புகாா் நிறுவனத்தின் பித்தளை பொருள்கள் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் முழு ஊதியம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா்.

அதன் விவரம்:

சாதாரண நாள்களில் பித்தளை பொருள் உற்பத்தி செய்யும் தொழிலாளா்களுக்கு, வடிவமைக்கும் பொருள்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும். கரோனா பொதுமுடக்க காலத்தில் தொழிலாளா்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில், ஏப்ரலில் ரூ.2500, ஜூலையில் ரூ.5 ஆயிரம் தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

வீட்டு வாடகை, மின்கட்டணம், பள்ளி-கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், பித்தளைத் தொழிலாளா்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். ஆகவே, தொழிலாளா்கள் பெற்று வந்த ஊதியத்தைச் சராசரியாகக் கணக்கிட்டு, குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT