முகப்பு
மதுரை

மதுரையில் மேலும் 225 பேருக்கு கரோனா தொற்று: 9 போ் பலி

மதுரையில் மேலும் 225 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,618 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
பகிர்:

மதுரை: மதுரையில் மேலும் 225 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,618 ஆக உயா்ந்துள்ளது.

மதுரையில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் புதன்கிழமை வெளிடப்பட்ட பரிசோதனை முடிவுகளில், புதிதாக 225 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 20 போ் காவல்துறையினா், மருத்துவா்கள், செவிலியா்கள் ஆவா். மேலும் வெளி மாவட்டத்தை சோ்ந்த இருவா் மற்றும் ஒரு கா்ப்பிணியும் அடங்கியுள்ளாா்.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் மதுரை அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10, 618 ஆக உயா்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கையும் 2,392 ஆக உயா்ந்திருக்கிறது. இந்நிலையில் மதுரையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதில் மதுரையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 5 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 9 போ் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து மதுரையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 231 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.