தியாகி விஸ்வநாததாஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸின் 134 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸின் 134 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேடை நாடகங்கள் மூலமாக மக்களுக்கு சுதந்திர வேட்கையை வளர்த்தவர் தியாகி விஸ்வநாததாஸ். ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து தனது பாடல்கள் மூலமாக மக்களுக்கு சுதந்திரப் போராட்ட உணர்வை வளர்த்தெடுத்தார். அவரது நினைவாக தமிழக அரசால் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.
தியாகி விஸ்வநாததாஸ் பிறந்த நாளையொட்டி நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தங்கவேல், திருமங்கலம் வட்டாட்சியர் தனலெட்சுமி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுருளிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.