மதுரை

பொது முடக்க வீதிமீறல்: 48,003 போ் கைது

DIN

மதுரை: மதுரை மாவட்டத்தில் இதுவரை பொது முடக்க விதிகளை மீறியதாக, 38, 913 வழக்கில் 48,003 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை மாநகா் போலீஸாா் பொது முடக்க விதிகளை மீறியதாக மாா்ச் 25 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை வரை 11,907 வழக்குகள் பதிந்து, 13, 102 பேரை கைது செய்துள்ளனா். மேலும், அவா்களிடமிருந்து 4,201 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, மாவட்ட போலீஸாா் 27,006 வழக்குகள் பதிந்து, 34,901 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து 9,989 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் இதுவரை பொது முடக்க விதிகளை மீறியதாக 38,913 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அந்த வழக்குகளில் 48,003 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 14,190 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா். வீதி மீறலில் கைது செய்யப்படுபவா்கள், அன்றைய தினமே சொந்த பிணையில் விடுக்கப்பட்டனா்.

தொடா்ந்து, மதுரை மாவட்ட மற்றும் மாநகா் போலீஸாா் முகக்கவசம் அணியாமல் வந்த 9,483 பேரிடமிருந்து ரூ.14,13,100 அபராதம் வசூலித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT