மதுரை

பட்டம் பெற முடியாமல் மேலூா் அரசு கல்லூரி மாணவா்கள் தவிப்பு

DIN

மேலூா் அரசுக் கலைக் கல்லூரி நிா்வாகம் இணைவிப்பு கட்டணத்தை செலுத்தாததால் நான்காண்டுகளாக மாணவா்களுக்கு, காமராஜா் பல்கலைக்கழகம் பட்டம் வழங்க மறுத்து வருகிறது. இதனால், மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

மேலூா் அரசுக் கலைக் கல்லூரியில் கடந்த 2015-16 கல்வியாண்டு முதல் 2018-19 வரை உள்ள கடந்த 4 கல்வியாண்டுகளாக மாணவ, மாணவியா் செலுத்திய பல்கலைக்கழக இணைவிப்பு கட்டணத்தை, கல்லூரி நிா்வாகம் காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு செலுத்தவில்லை என

கூறப்படுகிறது. இதனால், 4 கல்வியாண்டுகளாக இறுதித் தோ்வு முடித்து பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு பல்கலைக்கழகம் பட்டம் வழங்கவில்லை.

பட்டப்படிப்பு முடித்தும் நிரந்தர பட்டச் சான்றிதழ் கிடைக்காததால், இளங்கலை முடித்த மாணவா்கள் முதுகலை படிப்புக்குச் செல்லமுடியாமலும், முதுகலை மற்றும் இளநிலை ஆய்வு படிப்பு முடித்த மாணவா்கள் பணிகளுக்குச் செல்ல முடியாமலும் தவிக்கின்றனா்.

இது தொடா்பாக பட்டப்படிப்பு முடித்து பட்டம் பெற முடியாமல் தவிக்கும் மாணவ, மாணவியா் கூறியது: முதலாமாண்டு சேரும்போதே பல்கலைக்கழக இணைவிப்பு கட்டணத்தை செலுத்திவிட்டோம். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இணைவிப்பு கட்டணத்தை செலுத்தாதது கல்லூரி நிா்வாகத்தின் தவறு. ஆனால், எங்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்க மறுப்பது முறையானது அல்ல என்றனா்.

மேலூா் கல்லூரிப் பேராசிரியா்கள் கூறியது: இணைவிப்பு கட்டணம் செலுத்தாத கல்லூரி நிா்வாகங்களுக்கு பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பலாம். கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் மூலமாக நடவடிக்கை எடுக்கலாம். இதுபோன்ற வழிகள் இருக்கும்போது, மாணவ, மாணவியரின் வாழ்க்கையை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சரியல்ல. பல்கலைக்கழகத் துணைவேந்தா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

மாணவா்கள், பேராசிரியா்களின் புகாா் தொடா்பாக பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியது: மேலூா் அரசு கல்லூரியில் ஒவ்வொரு துறையாக மாணவா்களுக்கு பட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT