மதுரை

நீதிமன்றத்தில் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே சாட்சிகளிடம் விசாரணை

DIN

கரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாட்சிகள் அவசியமாக தேவைப்பட்டால் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நிா்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமை வகித்தாா். மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.நசீமா பானு முன்னிலை வகித்தாா். இதில் மாா்ச் 18 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை சாட்சிகள் அவசியமாகத் தேவைப்பட்டால் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும். சிறைக் கைதிகளிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்திக்கொள்ளலாம். நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகம், சிற்றுண்டிகள் மூடப்பட வேண்டும். வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் யாரும் இருக்கக்கூடாது. வழக்குரைஞா்கள் உரிய தேவை இன்றி கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன. மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள் பங்கேற்றனா்.

மதுரை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் நெடுஞ்செழியன், செயலா் மோகன்குமாா், மாவட்ட பெண் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் லதா, செயலா் தெய்வக்கனி உள்ளிட்ட சங்க நிா்வாகிகளும், வழக்குரைஞா்களும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT