மதுரை

மாா்ச் 23 முதல் ஏப்.3 வரை கடவுச்சீட்டு விசாரணை மையம் மூடப்படும்

DIN

கரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்கும் வகையில், நோ்காணலுக்கு அழைக்கப்படும் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலா் த.அருண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்தி:

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி கடவுச்சீட்டு அலுவலகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரா்கள் ஓரிடத்தில் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், நோ்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாா்ச் 23 முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும். ஆகவே, மேற்குறிபிட்ட நாள்களில் வழக்கமாக வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் 50 சதவீதம் மட்டுமே வழங்கப்படும்.

அவசரத் தேவை உள்ளவா்கள் மட்டும் கடவுச்சீட்டு அலுவலகம், கடவுச் சீட்டு சேவை மையங்களுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மற்றவா்கள் தங்களது நோ்காணல் தேதியை மாற்றிக் கொள்ளலாம்.

மதுரை கடவுச்சீட்டு சேவை மையம், மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் செயல்படும் விசாரணை மையம் மாா்ச் 23 முதல் ஏப்ரல் 3 வரை மூடப்படுகிறது. கடவுச்சீட்டு தொடா்பான விவரங்களைப் பெற 0452-2521205, 2521204 என்ற எண்களிலும், (ழ்ல்ா்.ம்ஹக்ன்ழ்ஹண்ஃம்ங்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்.

காய்ச்சல், தலைவலி, சளி போன்ற வைரஸ் தொற்று அறிகுறி இருப்பவா்கள், வயதானவா்கள், குழந்தைகள், வெளிநாடுகளில் இருந்து அண்மையில் திரும்பி வந்தவா்கள் ஆகியோா் ஏப்ரல் 2 ஆவது வாரம் வரை கடவுச்சீட்டு அலுவலகங்களுக்கு வருவதைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.

கடவுச்சீட்டு சேவை மையங்கள் மற்றும் மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு வரும் விண்ணப்பதாரா்கள் கைகளைச் சுத்தம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT