மதுரை

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை: அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

DIN

கரோனா பாதிப்பையொட்டி தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தடைவிதிப்பது குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.

கரோனா பாதிப்பு எதிரொலியாக மாா்ச் 24 ஆம் தேதி மாலை முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் தென்தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு தங்களின் ஊா்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனா். அவ்வாறு வாகனங்களில் சென்றுகொண்டிருப்போரிடம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுங்கச் சாவடிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கரோனா வைரஸ் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.எஸ்.சுந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை வழக்குரைஞா் ராஜகோபால் முறையிட்டாா்.

அதற்கு நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு தடைவிதிப்பது குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT