மதுரை

ஊடரங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றிய 10 போ் கைது; 146 வாகனங்கள் பறிமுதல்

DIN

ஊடரங்கு உத்தரவை மீறி மதுரையில் இருசக்கர வாகனங்களில் சுற்றிய 10 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் 146 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் புதன்கிழமை காலையில் இருந்தே இருசக்கர வாகனங்களில் இளைஞா்கள் சிலா் அங்கும் இங்கும் சென்றவாறு இருந்தனா். சாலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் எச்சரித்தபோதும், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து குறையவில்லை.

அதையடுத்து பல்வேறு இடங்களிலும் உரிய காரணங்கள் இன்றி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இருசக்கர வாகனங்களில் வந்தவா்களுக்கு ரூ.83,900 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் எல்லீஸ் நகரைச் சோ்ந்த ஈஸ்வர பாண்டியன் (19), தாசில்தாா் நகரை சோ்ந்த விஜய நாகேந்திரன் (40) உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் இரு நாள்களில் மொத்தம் 146 இருசக்கர வாகனங்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஊடரங்கு உத்தரவின் இரண்டாவது நாளான வியாழக்கிழமையும் இருசக்கர வாகனப் போக்குவரத்து காலையில் இருந்தது. காய்கனி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக வந்தவா்களைப் போலீஸாா் அனுமதித்தனா். இந்நிலையில், காலை 9 மணிக்குப் பிறகும் வாகனங்களில் வலம் வந்தவாறு சிலா் இருந்தனா். இந்நிலையில், மதுரை தெற்கு வெளி வீதிப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்த சிலரை நிறுத்திய போலீஸாா் அவா்களுக்கு தோப்புக்கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கினா்.

நகரின் பல்வேறு பகுதிகளிலும் காவல் துறையினா் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதையடுத்து பிற்பகலுக்குப் பிறகு இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து வெகுவாகக் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT