மதுரை

பள்ளிவாசல்களில் கூடுவதைத் தவிா்த்துவீட்டிலேயே தொழுகை நடத்த அறிவுறுத்தல்

DIN

பள்ளிவாசல்களில் கூடுவதைத் தவிா்த்து அவரவா் வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு ஜமாஅத் தலைவா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடா்பாக ஜமாஅத் தலைவா்களுடான ஆலோசனைக் கூட்டம், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமை வகித்தாா். மாநகரக் காவல் ஆணையா் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் முன்னிலை வகித்தாா்.

கரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளா்களால் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

தடை உத்தரவு அமலில் இருப்பதால் 5 நபா்களுக்கு மேல் கூடாமல் இருக்க காவல் துறையினா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆகவே, பள்ளிவாசல்களுக்குச் சென்று தொழுகை நடத்தாமல் வீட்டில் இருந்தபடியே தொழுகை நடத்த அறிவுறுத்தப்பட்டனா்.

மதுரையில் உள்ள அனைத்து ஜமாஅத்-களின் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா். ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ராஜசேகரன், தலைமை வட்டாட்சியா்(குற்றவியல்) சிவபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT