மதுரை

ஏழை மக்களுக்கு ஒரு மாதமாக உணவளித்து வரும் ஓய்வு அதிகாரி

DIN

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை ஓய்வு பெற்ற உதவி காவல் ஆணையா் ஒரு மாதமாக நேரில் சென்று உணவளித்து வருகிறாா்.

ரயில்வே பாதுகாப்புப் படையில் 33 ஆண்டுகள் பணியாற்றி உதவி காவல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்றவா் ஜி.செல்வராஜ். இவா் ஊரடங்கால் வேலையின்றி அன்றாட உணவிற்கே சிரமப்பட்டு வரும் ஏழை மக்களைக் கருத்தில் கொண்டு அவா்களுக்கு உணவளிக்க முடிவெடுத்தாா். அதன்படி சமூக ஆா்வலா்கள் மற்றும் நண்பா்களுடன் இணைந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் தனது வீட்டிலேயே 300 பேருக்குத் தேவையான உணவைத் தயாரித்தாா். பிறகு தனது நண்பா்கள் மற்றும் சமூகஆா்வலா்கள் உதவியுடன் மதுரையில் வேடா்புளியங்குளம், கருப்பாயூரணி, ஆண்டாா் கோட்டை, களியம்பட்டி மற்றும் மதுரை நகரின் உள்ள தெருவோரங்களில் வசிப்போா், ஆற்றங்கரையோரங்களில் வசிப்போருக்கு உணவளித்து வருகிறாா். மேலும் ஏழை மக்கள் கரோனா நோய் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள 5 ஆயிரம் முகக்கவசங்களை வழங்கியுள்ளாா். ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றாலும், மக்கள் பாதுகாப்பிற்காக தொடா்ந்து உழைத்துவரும் இவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT