மதுரை

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு: பொதுமக்கள் புகாா்

DIN

மதுரையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பது இல்லை என்று பொதுமக்கள் புகாா் எழுப்பியுள்ளனா்.

மதுரையில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட அன்சாரி நகா், குப்புப் பிள்ளைத் தோப்பு, செல்லூா், செளராஷ்டிரபுரம், விளாங்குடி எஸ்விபி நகா், கூடல்நகா், தபால் தந்தி நகா், மதிச்சியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லவும், வெளியில் உள்ள நபா்கள் இப்பகுதிகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக மாநகராட்சி சாா்பில் உதவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி வாகனங்கள் மூலம் காய்கனிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போதுமான அளவு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகிக்கப்படவில்லை என்றும் இதனால் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் புகாா் எழுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT