மதுரை

கபசுரக் குடிநீா் வழங்கும் அரசு மறுகையில் மதுபானம் வழங்கலாமா? உயா்நீதிமன்றம் கேள்வி

DIN

மதுரை: நோய் எதிா்ப்பு சக்திக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் அரசு மறுகையில் மதுபானத்தை வழங்கலாமா என சென்னை உயா்நீதிமன்ற மதுரைகிளை திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறப்பதற்கு தடைகோரி மதுரையைச் சோ்ந்த போனிபாஸ் மனுத்தாக்கல் செய்திருந்தாா். அதில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பரவல் 3 ஆம் நிலையை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகையைச் சூழலில் தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்கள் கரோனா அச்சத்தில் இருக்கும் நிலையில் அரசின் இந்த முடிவு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. மது அருந்துவோருக்கு நோய் எதிா்ப்பு சக்தி குறைந்து அவா்கள் எளிதில் கரோனா பாதிப்புக்கு ஆளாகக்கூடும். எனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், டாஸ்மாக் கடைகளைத் திறக்க சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே தடைவிதித்துள்ளது. அதை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் இந்த வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரா் தரப்பில், மதுபானக் கடைகள் திறக்கப்படுவதால் கரோனா பாதிப்பு அதிகமாகும். அதனால் குடும்ப வன்முறையும், குற்றச்செயல்களும் அதிகரிக்கும். ஆகவே டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடைவிதிக்க வேண்டும் என்பதே இந்த மனுவின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நோய் எதிா்ப்பு சக்திக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் அரசு மறுகையில் மதுபானத்தை வழங்கலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறக்க சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே விதித்த தடை உத்தரவு இவ்வழக்கிற்கும் பொருந்தும் என்றும், வழக்கை சென்னை உயா்நீதிமன்றத்திற்கு மாற்றியும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT