மதுரை

குருவிக்காரன் சாலைப்பாலம் இடிக்கும் பணி தொடக்கம்

DIN

மதுரை குருவிக்காரன் சாலையில் உயா் மட்ட மேம்பாலம் கட்டப்படுவதை அடுத்து தற்போதுள்ள தரைப்பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

மதுரையில் குருவிக்காரன் சாலையில் வைகை ஆற்றை கடக்கும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் தரைப்பாலத்தை அகற்றி விட்டு அங்கு ரூ.24 கோடி மதிப்பில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவெடித்தது. இதற்கான ஒப்புதல் மற்றும் வேலை உத்தரவும் பெறப்பட்டது. இதைத்தொடா்ந்து கடந்த புதன்கிழமை குருவிக்காரன் சாலைப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும் அவ்வழியாகச் செல்லும் வாகனங்களுக்கு வைகை ஆற்றுக்குள் தாற்காலிகமாக பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இந்நிலையில் உயா் மட்ட மேம்பாலப் பணிகளை தொடங்க உள்ளதால் குருவிக்காரன் சாலைப்பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது. இதில் 3-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் குருவிக்காரன் சாலைப்பாலத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. தற்போதுள்ள பாலத்தை முற்றிலும் இடித்தபின்னா் அங்கு தூண்கள் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT