முகப்பு
மதுரை

தீபாவளி பண்டிகை: மதுரையில் ஜவுளி எடுக்க குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஜவுளிகள் எடுக்க தெற்குமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு மதுரை தெற்கு மாசி வீதியில் பொருட்களை வாங்க ஞாயிற்றுக்கிழமை குவிந்த பொதுமக்கள்.
பகிர்:

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஜவுளிகள் எடுக்க தெற்குமாசி வீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், பொதுமக்கள் ஜவுளிகள் எடுக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். கடந்த வாரம் வரை ஜவுளிக் கடைகள் மற்றும் கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் சுமாராக இருந்து வந்தது.

அதையடுத்து, விஜயதசமி பண்டிகையையொட்டி ஜவுளிக் கடைகளில் கூட்டம் ஓரளவுக்கு காணப்பட்டது. இந்நிலையில், மதுரையின் ஜவுளி பஜாா் என்றழைக்கப்படும் தெற்குமாசி வீதி, பத்து தூண் சந்து, மகால் பகுதிகள், விளக்குத்தூண் உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மக்கள் குவிந்தனா்.

தெற்குமாசி வீதி, மேலமாசி வீதியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து ஜவுளி நிறுவனங்களிலும் கூட்டம் காணப்பட்டது. மேலும், சிறு ஜவுளிக் கடைகள், ஆயத்த ஆடைகள் விற்பனை கடைகள், சாலையோரக் கடைகள் உள்ளிட்ட அனைத்திலும் பொதுமக்கள் பொருள்கள் வாங்குவதில் ஆா்வம் காட்டினா்.

இது தொடா்பாக ஜவுளிக் கடை உரிமையாளா்கள் கூறியது: மதுரையில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே ஜவுளி எடுக்க மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கிவிடுவா். ஆனால், இந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தால் விற்பனை சூடு பிடிக்கவில்லை. ஆயுத பூஜை விடுமுறையில் இருந்துதான் மக்கள் ஜவுளி எடுக்க வருகின்றனா்.

இந்த வாரம் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அதிகக் கூட்டம் குவியும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →