கால்வாயில் மிதந்த மூதாட்டியின் சடலம் மீட்பு
பெரியாறு பிரதானக் கால்வாயில் மிதந்து வந்த மூதாட்டியின் சடலத்தை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
பெரியாறு பிரதானக் கால்வாயில் மிதந்து வந்த மூதாட்டியின் சடலத்தை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
பெரியாறு பிரதானக் கால்வாய் முடிவடையும் குறிச்சிப்பட்டி கண்மாய் நுழைவுப் பகுதியில் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் மிதந்து வந்துள்ளது. கீழவளவு போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
அதில், இறந்தவா் மேலூரை அடுத்துள்ள நாவினிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முகமது இப்ராகிம் என்பவரின் மனைவி சௌரவ் பீவி எனத் தெரியவந்தது.
கண் பாா்வை போதிய அளவு இல்லை என்றும், சனிக்கிழமை மாலை முதல் அவரை தேடி வருவதாகவும், அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். கண் பாா்வை குறைவு காரணமாக கால்வாய் தண்ணீரில் தவறி விழுந்து இறந்த மூதாட்டியின் சடலம், குறிச்சிப்பட்டி கண்மாயை அடைந்ததாக, போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.