முகப்பு
மதுரை

சின்மயா மிஷனில் ஏழைகளுக்கு தீபாவளி புத்தாடை வழங்கல்

தீபாவளியை முன்னிட்டு, மதுரை சின்மயா மிஷனில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஞாயிற்றுக்கிழமை புத்தாடைகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

தீபாவளியை முன்னிட்டு, மதுரை சின்மயா மிஷனில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ஞாயிற்றுக்கிழமை புத்தாடைகள் வழங்கப்பட்டன.

மதுரை சின்மயா மிஷன் சாா்பில், ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போதும் ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்குவது வழக்கம். இந்தாண்டு ஏழைகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி, மதுரை டோக் நகரில் உள்ள சின்மயா மிஷன் ஆசிரமத்தில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு, சின்மயா மிஷன் தலைவா் சுவாமி சிவயோகானந்தா தலைமை வகித்துப் பேசியது:

தீபாவளி என்பது ஒளிமயமான திருவிழாவாகும். எனவே, நம்முடைய எண்ணங்கள், செயல்கள், நாம் பிறரிடம் நடந்து கொள்ளும் விதம் அனைத்தும் ஒளிமயமாக இருக்க வேண்டும். மேலும், நம்முடைய இல்லம் ஒளிமயமாய் இருப்பதோடு, நம்மைச் சுற்றியுள்ள சமுதாயம், நம்முடைய தேசம் இவை அனைத்தும் ஒளிமயமாக விளங்க நாம் முயற்சிக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியை, விஜயா ஸ்ரீனிவாசன் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண்களுக்கு இனிப்பு, காரம் வகைகள் மற்றும் வேட்டி, சேலை உள்ளிட்ட புத்தாடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சின்மயா மிஷன் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →